வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பு தண்ணீரில் மிதக்கும் வீடுகள்

Added : டிச 04, 2019
Share
Advertisement
கமுதி:கமுதி அருகே நாராயணபுரத்தில் ரோட்டோர மழை நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழை நீர் வெளியேற முடியாமல், வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் தவிக்கின்றனர். கமுதி அருகே கள்ளிப்பட்டியில் இருந்து நாராயணபுரம் வழியாக குண்டாறுக்கு மழை நீர் செல்லும் வகையில் ரோட்டோரங்களில் வரத்து கால்வாய் உள்ளது. இந்த வரத்து கால்வாயை ஆக்கிரமித்து, வீடுகள், சுற்றுச்சுவர்களை அமைத்துள்ளனர்.
 வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பு தண்ணீரில் மிதக்கும் வீடுகள்

கமுதி:கமுதி அருகே நாராயணபுரத்தில் ரோட்டோர மழை நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் மழை நீர் வெளியேற முடியாமல், வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் தவிக்கின்றனர்.

கமுதி அருகே கள்ளிப்பட்டியில் இருந்து நாராயணபுரம் வழியாக குண்டாறுக்கு மழை நீர் செல்லும் வகையில் ரோட்டோரங்களில் வரத்து கால்வாய் உள்ளது. இந்த வரத்து கால்வாயை ஆக்கிரமித்து, வீடுகள், சுற்றுச்சுவர்களை அமைத்துள்ளனர். இதனால் புறம் போக்கு, தரிசு நிலங்கள், தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளதால் வீடுகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

மேலும் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழை நீரில் மிதந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ரோட்டோர வரத்து கால்வாயை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாராயணபுரம் கிருஷ்ணன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X