பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் கல்லுாரி வளாகத்தில் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகம்

Added : டிச 04, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகம் உலகங்காத்தான் அருகே தனியார் கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் வரும் 10ம் தேதிக்குள் துவங்குகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், 19 சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், 3 மதுவிலக்கு, 3 மகளிர், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் இயங்குகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக ஜெயச்சந்திரன் கடந்த 17ம் தேதி பொறுப்பேற்றார்.தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவு அலுவலகத்தில் 19ம் தேதி தற்காலிகமாக காவல் கட்டுப்பாட்டு அறையும், 22ம் தேதி, போக்குவரத்து காவல் நிலைய முதல் தளத்தில் காவல் தனிப்பிரிவு அலுவலகமும் துவங்கியது.இந்நிலையில், நிர்வாக வசதிக்காக உலகங்காத்தான் அடுத்த கலைவாணி கல்வியியல் தனியார் கல்லுாரி வளாகத்தில் எஸ்.பி., அலுவலகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டிற்குட்பட்ட அனைத்து பிரிவுகளும் தனியார் கல்லுாரி வளாகத்தில் இயங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X