குண்டும் குழியுமான சாலையால் வாகன விபத்துகள் அதிகரிப்பு

Added : டிச 04, 2019
Share
Advertisement
முதுகுளத்துார்:முதுகுளத்துார்-பரமக்குடி ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.சேதம் அடைந்த முதுகுளத்துார்-பரமக்குடி பிரதான சாலையை கடந்த ஓராண்டிற்கு முன் பராமரிப்பு செய்தனர். தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ரோட்டில் மழை நீர்
 குண்டும் குழியுமான சாலையால்  வாகன விபத்துகள் அதிகரிப்பு

முதுகுளத்துார்:முதுகுளத்துார்-பரமக்குடி ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சேதம் அடைந்த முதுகுளத்துார்-பரமக்குடி பிரதான சாலையை கடந்த ஓராண்டிற்கு முன் பராமரிப்பு செய்தனர். தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ரோட்டில் மழை நீர் தேங்கியுள்ளது. இவ்வழியே டுவீலர்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும் போது விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதுகுளத்துாரில் இருந்து பரமக்குடி செல்லும் முக்கியமான சாலையாக இருப்பதால் அதிக மான வாகனங்கள் இவ்வழியே செல்கின்றனர். ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இச்சாலையை மராமத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X