பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் மரக்கன்றுகள் சாலை பணியாளர்களுக்கு பாராட்டு

Added : டிச 04, 2019
Advertisement
 சாலையோரம் மரக்கன்றுகள் சாலை பணியாளர்களுக்கு பாராட்டு

தியாகதுருகம்:தியாகதுருகம் - ரிஷிவந்தியம் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் சாலைப் பணியாளர்களின் செயல் பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
தியாகதுருகத்திலிருந்து ரிஷிவந்தியம் வழியே திருக்கோவிலுார் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையோரத்தில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கடந்த 2011ம் ஆண்டு தானே புயல் தாக்கியபோது சாயந்தது.மற்ற மரங்களும் வயதானதால் காய்ப்புத் திறன் குறைந்து கிளைகள் பலவீனமாக உள்ளன. இதனால் சாலை நெடுகிலும் நிழல் தரும் மரங்கள் இன்றி கோடை காலங்களில் வெயில் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.இந்நிலையில், சாலையோரம் பல கி.மீ., துாரத்திற்கு நிழல்தரும் மரங்களை நட்டு பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணிகளை சாலை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.நிழல் தரும் புங்கை, வேம்பு, வாகை உள்ளிட்ட மரக்கன்றுகளை சாலையோரம் நட்டனர். மரக்கன்றுகளை பாதுகாக்க அதை சுற்றி வேலி அமைத்துள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால் செடிகள் செழித்து வளர்ந்து வருகின்றன.கோடைகாலத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். கடமைக்கு மரக்கன்றுகளை நடாமல், அதனை முறையாக பராமரிக்கும் சாலை பணியாளர்களின் செயல் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X