சங்கு கம்பெனியால்சுகாதாரக்கேடு புகார்

Added : டிச 04, 2019
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் கிராமத்தில் செயல்படும் சங்கு கம்பெனியால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், பலர் நோய் பாதிப்பிற்குள்ளாவதாக அப்பகுதியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப் பதாவது:

பெரியபட்டினம் கிராமத்தில் சங்கு கம்பெனி செயல்படுகிறது. பல இடங்களில் இருந்து சங்குகளை லாரிகளில் வாங்கி வந்து திறந்த வெளியில் கொட்டி அதனை சுத்தம் செய்வது, பாலீஷ் செய்வது போன்ற பணிகள் நடக்கின்றன. குவிந்து கிடக்கும் சங்குகளில் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் அருகில் வசிப்பவர்கள் காய்ச்சல் பாதிப்பிற்குள்ளாகின்றனர். சங்குகள் அழுகிய பின்பு வரும் துார்நாற்றம் அந்த பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் அவதிப்படுகின்றனர். சங்குகளை சுத்தம் செய்வதற்கு சல்பியூரிக் ஆசிட் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்திய ஆசிட் மற்றும் அமிலங்கள் தரையில் விடப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தும் பல முறை அபராதம் மட்டும் விதித்துள்ளனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X