பொது செய்தி

தமிழ்நாடு

கரியாலுார் மலைவாழ் மாணவர்களுக்கு

Added : டிச 04, 2019
Advertisement
 கரியாலுார் மலைவாழ் மாணவர்களுக்கு

கள்ளக்குறிச்சி:கரியாலுார் மலைவாழ் மாணவர்களுக்கு நேரு யுவக்கேந்திரா சார்பில் வாழ்க்கைத் திறன் மேம்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த கரியாலுார் டேனிஷ் மிஷன் பள்ளியில் விழுப்புரம் மனமகிழ் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். அதில், வாழ்க்கை திறன் மேம்படுத்தும் வகையில் சுய விழிப்புணர்வு, முடிவெடுக்கும் திறன், பிரச்னைகளை தீர்க்கும் திறன், படைப்பு சிந்தனை, விமர்சன சிந்தனை, உணர்ச்சிகளை சமாளிப்பது, மன அழுத்தத்தை சமாளிப்பது, பாலியல் ரீதியான பிரச்னைகளை கையாளுதல் ஆகியவை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.பயிற்சி வகுப்புக்கு நேரு யுவக்கேந்திரா ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சவுந்தர் காமராஜ் வாழ்த்திப் பேசினார்.தொடர்ந்து 8 நாட்கள் நடந்த பயிற்சி வகுப்பில் நம்பிக்கை மையம் ஆற்றுப்படுத்துனர் அசோக்குமார், மனநல ஆலோசகர்கள் வினோத்குமார், இளையராஜா, வெங்கடேசன், சமூக ஆர்வலர் மதுபாலன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X