சாயல்குடி பஸ்ஸ்டாண்டில் பிக்பாக்கெட்பகலில் போலீஸ் பாதுகாப்பு தேவை

Added : டிச 04, 2019
Advertisement

சாயல்குடி:சாயல்குடி பேரூராட்சி பஸ்ஸ்டாண்டிற்குள் உரிய போலீஸ் பாதுகாப்பு இல்லாத நிலையில் பல ஆண்டுகளாக பிக்பாக்கெட் சம்பவங்கள் தொடர்கிறது.

சாயல்குடியில் சனிக்கிழமை தோறும் பஸ்ஸ்டாண்ட் அருகே சந்தை நடப்பது வழக்கம். சாயல்குடி சுற்று வட்டார கிராம மக்கள் சந்தையில் பொருட்களை வாங்குவதற்காக பெருமளவு பஸ் ஏறுவதற்கு வந்து செல்கின்றனர். அச்சமயங்களில் ஒன்றும் அறியாத அப்பாவி பெண்களிடம் நுாதன முறையில் பேசி பிக்பாக்கெட் அடிக்கின்றனர். பணத்தை பறிகொடுத்து விட்டு, கதறும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகிறது.

சாயல்குடி பஸ்ஸ்டாண்டிற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, அருப்புக்கோட்டை, மதுரை, கோவை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் வந்து செல்கின்றன.


தேவை போலீசார்:



பஸ்ஸ்டாண்டிற்குள் போலீஸ் பந்தோபஸ்து இல்லாத நிலையால் அடிக்கடி சமூக விரோதிகள், பிக்பாக்கெட் ஆசாமிகள் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறித்து செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் போலீசில் புகார் கொடுக்க அச்சப்பட்டு, பரிதாபமாக வீடு திரும்பும் நிலை உள்ளது. எனவே எஸ்.பி., வருண்குமார் சாயல்குடி பேரூராட்சி பஸ்ஸ்டாண்டிற்குள் நிரந்தரமாக போலீசாரை பணியமர்த்தினால் மட்டுமே திருட்டுப் பயம் குறையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X