பொது செய்தி

தமிழ்நாடு

உலக எய்ட்ஸ் தினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : டிச 04, 2019
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் உலக எய்ட்ஸ் தினத்தில் ஏ.ஆர்.டி., தொண்டு நிறுவனம், சாய் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி, செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, முகமது சதக் ஹமீது கலை அறிவியல் கல்லுாரி இணைந்து சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் 202 மாணவர்கள்,20

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் உலக எய்ட்ஸ் தினத்தில் ஏ.ஆர்.டி., தொண்டு நிறுவனம், சாய் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி, செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லுாரி, முகமது சதக் ஹமீது கலை அறிவியல் கல்லுாரி இணைந்து சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் 202 மாணவர்கள்,20 ஆசிரியர்கள், 20 ஏ.ஆர்.டி., பணியாளர்கள் பங்கேற்றனர்.சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி துணை முதல்வர் ஆனந்த் வரவேற்றார்.

கல்லுாரி தாளாளர் மனோகரன் மார்ட்டின், யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம், செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லுாரி வினோத்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஏ.ஆர்.டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் டோலோ வின்சி ஆகியோர் எய்ட்ஸ் நோய் குறித்து விளக்கினர். விடியல் குழுவின் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.ரோமன் சர்ச் பஸ் நிறுத்தம் முதல் எல்.ஐ.சி., அலுவலகம் வரை மனித சங்கிலி நடந்தது. ஏ.ஆர்.டி., தொடர்பு திட்ட பணியாளர் திட்டத்தின் மாவட்ட வள அலுவலர் முத்துமாரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X