பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு தேவை கலெக்டர் வேண்டுகோள்

Added : டிச 04, 2019
Advertisement
 தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு தேவை கலெக்டர் வேண்டுகோள்

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாதிரி நன்னடத்தை விதிகளை, அரசியல் கட்சியினர் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

மேலும், தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார்.விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான, ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மாதிரி நன்னடத்தை விதிமுறைகளை செல்படுத்துதல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண்குராலா, விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் டவுன் டி.ஸ்.பி., சங்கர், அ.தி.மு.க., நகர செயலர் பாஸ்கரன், தி.மு.க., மாவட்ட துணைச் செயலர் ஜெயச்சந்திரன், நகர பொறுப்பாளர் சக்கரை, விழுப்புரம் நகர காங்., தலைவர் செல்வராஜ், வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், மயிலம் வட்டார தலைவர் கண்ணன், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலர் சுகுமார், தே.மு.தி.க., வழக்கறிஞர் முத்துலிங்கம், பி.எஸ்.பி., மாவட்ட செயலர் கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல், டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். டிசம்பர் 6ம் தேதி வேட்பு மனு தாக்கல், 13ம் தேதி மனுத்தாக்கல் செய்வதற்கு கடைசி நாள், 16ம் தேதி மனுக்கள் ஆய்வு நடக்கிறது.தொடந்து 18ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அடுத்து முதல்கட்டமாக 27ம் தேதி மற்றும் இரண்டாவது கட்டமாக 30ம் தேதி ஆகிய இரு நாட்களில் ஓட்டுப்பதிவும், வரும் ஜனவரி 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறம். வரும் ஜனவரி 4ம் தேதி தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவடைகிறது.தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகளை, அரசியல் கட்சியினர் முழுமையாக கடைபிடித்து, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக பகுதிகளிலும், உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வெள்ளை நிறத்திலும்; கிராம ஊராட்சி தலைவர்களுக்கு இளம்சிவப்பு நிறத்திலும்; ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்திலும்; மாவட்ட ஊராட்சி வார்டுக்கு மஞ்சள் நிறத்திலும்; ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.இரண்டு ஊராட்சி வார்டுகளுக்கு, பொதுவாக அமைக்கப்படும் ஓட்டுச்சாவடிகளில், ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு, இளநீல நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.ஓட்டுச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள், ஆதரவு கோருதல் கூடாது. அச்சடிப்பவர் மற்றும் வெளியீட்டாளர்கள் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல், சுவரொட்டி, கைப்பிரதி, துண்டு பிரசுரம், சுற்றறிக்கை அல்லது விளம்பரத்தை அச்சடித்தல் அல்லது வெளியிடுதல் கூடாது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X