ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரியான்கோட்டையை சேர்ந்த காளீஸ்வரன், ஸ்டெல்லாமேரி, சுகிர்தா, நாகராசு ஆகியோரின் வீடுகள் நேற்று மழையில் இடிந்தது. இதனால் இந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். மண்ணால் கட்டப்பட்ட சுவர் என்பதால் இந்த வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்து உள்ளன.
Advertisement