பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உற்சாகம்

Added : டிச 04, 2019
Advertisement
 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உற்சாகம்

சங்கராபுரம்:சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் 'பதில் சொல்; அமெரிக்கா செல்' மெகா வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.

இதில் மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பான அடித்தளம் அமைக்கும் நோக்கத்தில் 'தினமலர்' நாளிதழ், 'பட்டம்' எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. இது, தமிழில் வெளியாகும் ஒரே மாணவர் பதிப்பாகும்.பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளிகளுக்கிடையே மாநில அளவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மெகா வினாடி வினா போட்டியை 'தினமலர் பட்டம்' இதழ் நடத்தி வருகிறது.இந்த ஆண்டு கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் வினாடி வினா போட்டி சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், திருக்கோவிலுார் பகுதிகளில் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது.இறுதிப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணியில் 2 மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

அதையொட்டி வினாடி வினா விருது 2019-20 போட்டி 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற தலைப்பில் சங்கராபுரம் நியூ பவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.இந்த போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தகுதி தேர்வாக பொது அறிவு தேர்வு எழுதினர். அதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டது.பள்ளி முதல்வர் ஜெயந்தி மார்டின், நிறுவனர் பெரியசாமி, தாளாளர் தாகப்பிள்ளை, சேர்மன் மணிவண்ணன் ஆகியோர் 'தினமலர்' நினைவு கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X