சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கிய வாலிபர் உடல் மீட்பு

Added : டிச 04, 2019
Advertisement

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே ஆற்றில் குளித்தபோது மூழ்கி மாயமான வாலிபர் இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் செல்வம், 26; சென்னையில் பெயிண்ட்டராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2ம் தேதி மாலை தனது நண்பர்களுடன் தொண்டி ஆற்றில் குளி்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் நீரில் மூழ்கி மாயமானார்.தகவலறிந்து வந்த பெரியதச்சூர் போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு துறையினர், நேற்று முன்தினம் செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை வரை கிடைக்காததால் தேடும் பணியை கைவிட்டுச் சென்றனர். இந்நிலையில் நேற்று காலை 9:00 மணிக்கு தொண்டி ஆற்றில் செல்வம் உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதனையடுத்து பெரியதச்சூர் போலீசார், செல்வம் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X