பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கண்காணிப்பில் வீடூர் அணை

Added : டிச 04, 2019
Advertisement

விக்கிரவாண்டி:வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணை பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்றி வருவதுடன், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு நீர் வரத்து வரக்கூடிய செஞ்சி, பாக்கம், மேல்மலையனுாரில் பெய்த மழை நீர் தொண்டியாற்றிலும், ரெட்டணை பகுதியில் பெய்த மழை நீர் வராகநதி வழியாகவும் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வரத்து இருந்து வந்தது.வீடூர் அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியினை (605 மில்லியன் கனஅடி) கடந்த 1ம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு எட்டியது.அதனைத் தொடர்ந்து அன்று நள்ளிரவு 12.20 மணிக்கு அணைக்கு வந்து கொண்டிருந்த 1,200 கன அடி உபரி நீரை அதே அளவில் அணையிலுள்ள 9 ஷட்டர்களில் 3 ஷட்டர்கள் திறக்கப்பட்டு சங்கராபரணி ஆற்றில் திறந்து விட்டனர்.தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 11:00 மணி முதல் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் 5 ஷட்டர்கள் மூலம் 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.மேலும் பாசன வாய்க்காலுக்கு செல்லும் மதகினை திறந்து சிறிதளவு கால்வாய் வழியாகவும் உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.தொடர்ந்து நேற்று அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,200 கன அடி வந்ததால், அதே அளவில் அணையிலிருந்து மீண்டும் 3 ஷட்டர்கள் மூலம் வெளியேற்றினர். பிற்பகல் 12:30 மணிக்கு அணைக்கு நீர் வரத்து 1,500 கன அடியாக கூடியது.

இதனால் அதிகாரிகள் பிற்பகல் 1:00 மணி முதல் 1,500 கன அடி தண்ணீரை வெளியேற்றி சங்கராபரணி ஆற்றில் விட்டனர்.நீர் வரத்து குறையத் தொடங்கினால், அதற்கேற்ப உபரிநீரை வெளியேற்ற திட்டமிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவஹர் தலைமையில் உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் ஞானசேகரன் மற்றும் வருவாய் துறை, காவல் துறையினர் அணையில் முகாமிட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X