பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் மேம்பாலத்தில் ஆட்டோக்கள் நிறுத்த தடை

Added : டிச 04, 2019
Advertisement
 திண்டிவனம் மேம்பாலத்தில் ஆட்டோக்கள் நிறுத்த தடை

திண்டிவனம்:'தினமலர்' செய்தி எதிரொலியால், திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியில், ஆட்டோக்கள் நிறுத்தாத வகையில், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ்பகுதியிலுள்ள ரயில்வே இடத்திற்கு சொந்தமான நடைபாதையை பொது மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர். ரயில்வே தண்டவாளத்தை கடந்து நடைபாதை வழியாக பொது மக்கள் செல்லும் போது, அந்த வழியாக வரும் ரயிலில் சிக்கி பலர் இறந்தனர்.இதை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் பொது மக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை சமீபத்தில் அடைத்துவிட்டது. இதனால் பஸ் நிலையத்திலிருந்து நகர பகுதிக்கு வரும் பொது மக்கள், மேம்பாலத்தின் கீழ்பகுதியில் கட்டப்பட்டுள்ள படிக்கட்டு வழியாக, மேம்பாலத்தின் மேல்பகுதிக்கு வருகின்றனர்.பொது மக்கள் அதிக அளவில் மேம்பாலத்தின் மேல்பகுதிக்கு வருவதால், மேம்பாலத்தை தற்காலிக ேஷர் ஆட்டோ ஸ்டாண்டாக மாற்றி விட்டனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேம்பாலத்தில் ஆட்டோவை நிறுத்துவது குறித்து, சில தினங்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதைத்தொடர்ந்து, திண்டிவனம் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அதன் பேரில், மேம்பாலத்தின் மேல்பகுதியில் ஆட்டோவை நிறுத்தி, பொது மக்களை ஏற்றாதவாறு, ஒரு போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டு, ஆட்டோக்கள் நிறுத்தாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X