கண்டன தீர்மான அறிக்கை: வெள்ளை மாளிகை மறுப்பு

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019
Advertisement
கண்டன தீர்மான அறிக்கை: வெள்ளை மாளிகை மறுப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முனைந்துள்ளார். அதேபோல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜோ பிடன் மீது ஊழல் புகார்களை கூறுவதற்கு உக்ரைன் நாட்டு அதிபரின் உதவியை டிரம்ப் நாடியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் கண்டன தீர்மானம் கொண்டு வந்தனர்.




இதை பார்லிமென்ட்டின் புலனாய்வு குழு விசாரித்து அறிக்கை வெளியிட்டது. குழுவின் அறிக்கையில், டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தவறு செய்துள்ளார். இது டிரம்பின் வெட்ககேடான செயல் என கூறப்பட்டுள்ளது. இதனை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.பதவியை தவறாக பயன்படுத்தினார் என்பதற்கு டிரம்ப்பிற்கு எதிராக ஆதராமில்லை. இது ஒரு தலைபட்சமான அறிக்கை. இவ்வாறு வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னதாக பார்லி. புலனாய்வு குழுவுக்கு டிரம்பின் வழக்கறிஞர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 'அதிபர் டிரம்ப் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், டிரம்போ அவருடைய சார்பில் வழக்கறிஞர்களோ ஆஜராக மாட்டார்கள்' என கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X