பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பணிமனைக்கு செல்லும் சாலை சீரமைக்க பஸ் டிரைவர்கள் கோரிக்கை

Added : டிச 04, 2019
Advertisement
 அரசு பணிமனைக்கு செல்லும் சாலை சீரமைக்க பஸ் டிரைவர்கள் கோரிக்கை

திண்டிவனம்:திண்டிவனத்தில் அரசு போக்குவரத்து பணிமனைக்குச் செல்லும் சாலை மண் சாலையாக மாறியிருப்பதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் மேம்பாலத்தையொட்டி, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து தினமும் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது.அரசு டெப்போவிலிருந்து, திண்டிவனம் மெயின்ரோட்டிற்கு வரும் சாலை பழுதடைந்து, குண்டும், குழியுமாக தற்போது மண்சாலையாக மாறி நீண்ட நாட்கள் ஆகிறது.இந்த மண் சாலைவழியாகத்தான், அரசு பஸ்கள், மேம்பால பஸ் நிலையத்திற்கு வரவேண்டியுள்ளது. வாகனங்கள் செல்வதற்கு லாயக்கற்ற சாலையாக இருப்பதால், அரசு பஸ் டிரைவர்கள் தினமும் அவதியடைகின்றனர்.பணிமனைக்குச் செல்லும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையை, தார் சாலையாக மாற்ற நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X