பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் சக்கரபாணி நகரில் பிரதான சாலைகள் 'பஞ்சர்'

Added : டிச 04, 2019
Advertisement
 திண்டிவனம் சக்கரபாணி நகரில் பிரதான சாலைகள் 'பஞ்சர்'

திண்டிவனம்:திண்டிவனம் அருகே சக்கரபாணி நகரில் உள்ள பிரதான சாலை, குண்டும் குழியமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
திண்டிவனம் மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது சக்கரபாணி நகர். மானுார் ஊராட்சிக்குட்பட்ட சக்கரபாணி நகர், திண்டிவனம் நகரத்தையொட்டி அமைந்துள்ளது.இந்த நகரின் பிரதான சாலை, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக மண் சாலையாக மாறியுள்ளது. சக்கரபாணி நகரின் பிரதான சாலை வழியாக இறையானுாருக்குச் செல்ல அதிக அளவில் வாகனங்கள் செல்கிறது.பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்த சாலை, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படுமோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சக்கரபாணி நகரின் பிரதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X