பொது செய்தி

தமிழ்நாடு

சூறாவளியால் படகுகள் சேதம் துணை  இயக்குனர் ஆய்வு

Added : டிச 04, 2019
Advertisement

ராமநாதபுரம்:தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில், நவ.,29 முதல் மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் டிச.,1ல் காலை 4:00 மணிக்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 60 கி.மீ., வேகத்தில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு 10 அடிக்கு உயரத்தில் அலைகள் எழுந்தது. மண்டபம் தென் கடற்கரையில் நிறுத்தியிருந்த படகுகள் சேதமடைந்தன. இந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனை தொடர்ந்து சேதமடைந்த படகுகளை மதிப்பீடு செய்ய ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி தலைமையில் உதவி இயக்குனர், மீன்வளத்துறை ஆய்வாளர், தாசில்தார் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. சூறாவளியால் 30 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் 5 படகுகள் மட்டும் அதிகளவு சேதமடைந்து இருப்பதாகவும், மற்ற படகுகள் சிறிய அளவில் சேதமடைந்து இருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி கூறுகையில், குழு சமர்ப்பிக்கும் சேத மதிப்பீடு முடிவுகளின் அடிப்படையில் ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பி மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X