சேதமடைந்த குடிநீர் டேங்க் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த குடிநீர் டேங்க்

Added : டிச 04, 2019
Share
விழுப்புரம்:பரசுரெட்டிப்பாளையத்தில் சேதமடைந்த குடிநீர் டேங்க்கை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த பரசுரெட்டிப்பாளையம் காலனியில், மேல்நிலை குடிநீர் டேங்க் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டேங்க், அங்குள்ள பள்ளி வளாகத்தில் உள்ளது.கடந்த சில மாதங்களாக டேங்க் பழுதடைந்துள்ளது. டேங்க்கின் அடிப்பகுதி

விழுப்புரம்:பரசுரெட்டிப்பாளையத்தில் சேதமடைந்த குடிநீர் டேங்க்கை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த பரசுரெட்டிப்பாளையம் காலனியில், மேல்நிலை குடிநீர் டேங்க் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டேங்க், அங்குள்ள பள்ளி வளாகத்தில் உள்ளது.கடந்த சில மாதங்களாக டேங்க் பழுதடைந்துள்ளது. டேங்க்கின் அடிப்பகுதி துாண்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.இதனால், டேங்க் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சேதமடைந்த டேங்க்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X