விழுப்புரம்:விழுப்புரம் அருகே பம்பை ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலம் ஓராண்டில் சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே செஞ்சி நெடுஞ்சாலையின் குறுக்கே, பம்பை ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் தரைப்பாலம் இருந்ததால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீடித்து வந்தது.இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன் பம்பை ஆற்றில் தரைப்பாலம் அகற்றப்பட்டு, மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் சிமென்ட் கான்கிரீட் மூலம் கட்டப்பட்டு, பாலத்தில் வாகனங்கள் செல்கின்றன.
இந்த மேம்பாலத்தில் தற்போது, சிமென்ட் காரைகள் பெயர்ந்து மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் சிக்கி காயமடைகின்றனர். குறிப்பாக இரவில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. புதியதாக கட்டப்பட்ட மேம்பாலம் ஓராண்டில் சேதமடைந்தது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சேதமடைந்த மேம்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.