பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லி பெயர்ந்த சிமென்ட் சாலை அரசு பணம் வீணாகும் அவலம்

Added : டிச 04, 2019
Advertisement
 ஜல்லி பெயர்ந்த சிமென்ட் சாலை அரசு பணம் வீணாகும் அவலம்

விழுப்புரம்:விழுப்புரத்தில் சாலை விரிவாக்கப்பணிக்காக தரமற்ற முறையில் சிமென்ட் சாலை அமைப்பதால் அரசு பணம் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் நான்குமுனை சிக்னலில் இருந்து, கிழக்கு பாண்டி ரோடு மாதா கோவில் பஸ் நிறுத்தம் வரை 12 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்காக சாலையின் இருபுறங்களிலும், சிமென்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சிமென்ட் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்படுவதால், சில இடங்களில் இப்பணி முடிவதற்குள் கற்கள் பெயர்ந்துள்ளன.இந்த ஜல்லி கற்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும், சாலைப்பணி தரமற்ற முறையில் மேற்கொள்வதால் அரசு பணம் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சாலை விரிவாக்கப்பணியை தரமாக மேற்கொள்ள, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X