சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.6 லட்சம் சீட்டு மோசடி: பொதுமக்கள் முற்றுகை

Added : டிச 04, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் சீட்டு நடத்தி, ஆறு லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்து, பணத்தை மீட்டு தர வலியுறுத்தி, பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்தவர் பாண்டி. கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஏலச்சீட்டு, பலகார சீட்டு நடத்தி வந்தார். இவரிடம், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாதம் மற்றும் வாரந்தோறும் தவணைத் தொகை செலுத்தி வந்தனர்.இச்சூழலில், சீட்டு முதிர்வடைந்த பின்பும், பணத்தை வழங்காமல், பாண்டி, காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள், 'தலைமறைவான நபரை கண்டுபிடித்து, சீட்டு பணத்தை மீட்டுத்தர வேண்டும்' என வலியுறுத்தி, வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மனுவில், 'சீட்டு நடத்திய பாண்டி, ஆறு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டியுள்ளது; கடந்த இரு வாரமாக, அவர் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும்,' எனக் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X