'குட்டையை' குழப்பும் அதிகாரிகள்? குழம்பி தவிக்கும் பொதுமக்கள்

Added : டிச 04, 2019
Advertisement

பல்லடம்:பல்லடத்தில், சுகாதார கேடு அதிகரித்துள்ள நிலையில், பிரச்னைக்கு தீர்வு தெரியாமல் மக்கள் குழம்பிப் போய் உள்ளனர்.பல்லடம் அண்ணாநகரில், குடியிருப்புக்கு மத்தியில், குட்டை அமைந்துள்ளது. மழை காலங்களில், குட்டை நிறைந்து, உபரிநீர், குடியிருப்புகளை சூழ்கின்றன. அவற்றால், டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், அது குறித்து புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது;அண்ணாநகரில் உள்ள குட்டை, மழைக்காலங்களில் நிரம்பும்போது, தண்ணீர், குடியிருப்புகளை சூழ்கிறது. மேலும், பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், குடியிருப்புக்குள் நுழைகின்றன. மழைநீருடன், தண்ணீர் கலந்து, துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வீதிகளில், மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், அவற்றை கடந்தே குடியிருப்புக்குள் செல்ல வேண்டியுள்ளது. இதனால், சரும வியாதி மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில், குழந்தைகள் சிலர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.'குட்டையை துார்வாரவும், மழைநீர் தேங்காமல் தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலெக்டர், சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அனுப்பியும் பலனில்லை.'குப்பையை அகற்றும் பணி எங்களுடையது அல்ல' என, கூறுகின்றனர். இதனால், அண்ணா நகரில் வசிக்கும், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. குட்டையை துார்வாருவது யார் பொறுப்பு என்பது தெரியாமல் தவித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X