பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோமொபைல் எக்ஸ்போ : வரும், 6ம் தேதி துவக்கம்

Added : டிச 04, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், ரோட்டரி ஆட்டோ எக்ஸ்போ திட்ட தலைவர் பொன்ராஜ்குமார், திருப்பூர் எலைட் ரோட்டரி சங்க தலைவர் வாசுதேவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ்பாபு ஆகியோர் கூறியதாவது:கடந்த இரு ஆண்டுகளாக, திருப்பூர், ரோட்டரி ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2019ம் ஆண்டுக்கான எக்ஸ்போ, பழங்கரை, ஐ.கே.எப்., கண்காட்சி வளாகத்தில் வரும், 6ம் தேதி துவங்கி, 8ம் தேதி வரை நடக்கிறது.காலை, 10:00 முதல், மாலை, 7:00 மணி வரை நடைபெறும். ஸ்கோடா, மெர்சிடிஸ் பென்ஸ், கியா மோட்டார்ஸ், ஜாக்குவார், பி.எம்.டபிள்யூ., மினிகூப்பர், அவுடி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கார்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், அரங்குகள் அமைத்து பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 98422 99744, 95436 73446 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதன்மூலம் பெறப்படும் தொகை, ரோட்டரி கோசோலை அமைக்கவும், நலத்திட்ட உதவி வழங்கவும் பயன்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X