அவிநாசி:அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில், போர்மேன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.அவிநாசி, மின்வாரிய அலுவலகத்தில், சிறப்பு நிலை போர்மேனாக பணிபுரிந்து வந்தவர் சன்பேட்ரிக், 53. நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்தபோது, உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில், மாத்திரை உட்கொண்டுள்ளார்; திடீரென மயங்கி விழுந்து, இறந்தார்.
அங்கிருந்த ஊழியர்கள், அவரை, அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்; தனியார் மருத்துவமனை டாக்டர்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். பின், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர், ஏற்கனவே, மாரடைப்பால், அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய, போலீசாரின் சான்று வாங்கி வரும்படி, மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மாலை, 5:00 மணிக்குள் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய சட்டத்தில் இடமுள்ள நிலையில், 5:30 மணக்கு தான், போலீசார் சான்று வழங்கியுள்ளனர். இதனால், பிரதே பரிசோதன செய்ய, டாக்டர்கள் மறுத்தனர்.கோபமடைந்த, சன்பேட்ரிக்கின் உறவினர்களும், உடன் பணியாற்றுவோரும், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறியல் செய்ய முயன்றனர். இதற்கிடையில், போலீசாரும், டாக்டர்களும் அவர்களை சமாதானப்படுத்தி, (நாளை) இன்று, காலை, 8:00 மணிக்கு பிரேத பரிசோதனை செய்து, உடலை ஒப்படைப்பதாக கூறியதையடுத்து, அமைதியாகினர். இதனால், மருத்துவமனையில், பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE