பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்:ஐந்து ஆண்டாக தொடரும் போராட்டம்

Added : டிச 04, 2019
Advertisement

அன்னுார்:அன்னுாரின் கிழக்கு பகுதியில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, ஐந்து ஆண்டுகளாக, மூன்று ஊராட்சி மக்கள் போராடி வருகின்றனர்.அன்னுார் வட்டாரத்தில், ஒரு பேரூராட்சி, 21 ஊராட்சிகளில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அன்னுாரில் அரசு மருத்துவமனை உள்ளது. அன்னுாருக்கு வடக்கே மூக்கனுாரிலும், மேற்கே, பொகலுாரிலும், தெற்கே செம்மாணி செட்டிபாளையத்திலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஆனால், கிழக்கே ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை.இதுகுறித்து அல்லப்பாளையம் ஊராட்சி மக்கள் கூறியதாவது:அன்னுாருக்கு கிழக்கே, கஞ்சப்பள்ளி ஊராட்சியில், ஊத்துப்பாளையம், கஞ்சப்பள்ளி, நீலகவுண்டன் புதுார், குமரகவுண்டன் புதுார், தாசபாளையம் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. அருகிலுள்ள அல்லப்பாளையம் ஊராட்சியில், அல்லப்பாளையம், ருத்திரியம்பாளையம், கோனார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களும், பசூர் ஊராட்சியில் பசூர், புதுப்பாளையம், மத்திரெட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களும் என இப்பகுதியில், 30 கிராமங்கள் உள்ளன.இவற்றில், 15 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.ஆனால், இப்பகுதியில் ஒரு துணை சுகாதார நிலையம் மட்டும் உள்ளது. அதில் செவிலியர் மட்டும் பணியில் உள்ளார். இப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு செல்ல அவிநாசி ரோடு அல்லது சத்தி ரோடு சென்று, அங்கிருந்து அன்னுார் செல்ல வேண்டும். மிக குறைந்த பஸ்களே அன்னுாருக்கு உள்ளன. இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக, கலெக்டர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை.வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால், காத்திருந்து பஸ் பிடித்து, எட்டு கி.மீ., பயணம் செய்து, அன்னுார் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டி உள்ளது.இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X