பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., ஒன்றிய தலைவர் யார்? நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு

Added : டிச 04, 2019
Advertisement

அன்னுார்:பா.ஜ., ஒன்றிய தலைவராக யாரை தேர்வு செய்வது என கருத்து கேட்பு கூட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் நடந்தது.பாரதிய ஜனதா கட்சியில், அன்னுார் ஒன்றியத்தில், கிளை நிர்வாகிகள் தேர்தல் கடந்த மாதம் முடிந்தது. இதையடுத்து அன்னுார் ஒன்றியம், தெற்கு, வடக்கு என, இரண்டாக பிரிக்கப்பட்டது.இதில் தெற்கு ஒன்றியத்தில், 65 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் தலா 25 உறுப்பினர்களை கொண்ட, 34 கிளைகள் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து புதிதாக உருவான தெற்கு ஒன்றியத்தலைவராக யாரை தேர்வு செய்வது என்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் கெம்பநாயக்கன்பாளையத்தில் நடந்தது.25 உறுப்பினர்களை சேர்த்து தீவிர உறுப்பினராக தேர்வு பெற்றவர்களே நிர்வாகி பதவிக்கு போட்டியிட முடியும்.தற்போதைய ஒன்றிய தலைவர் விஜயகுமார், இளைஞரணி ஒன்றிய தலைவர் ஜெயபால், ஒன்றிய நிர்வாகி சிகாமணி ஆகியோர் போட்டியிட்டனர். மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சத்தியமூர்த்தி, செல்வராஜ், தேர்தல் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என, மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X