பொது செய்தி

தமிழ்நாடு

கோமுகி ஆற்றில் 3 ஆண்டுகளுக்கு பின் வெள்ளம்

Added : டிச 04, 2019
Advertisement
 கோமுகி ஆற்றில் 3 ஆண்டுகளுக்கு பின் வெள்ளம்

தியாகதுருகம்:கோமுகி ஆற்றில் 3 ஆண்டுகளுக்குப்பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கோமுகி ஆற்றில் கச்சிராபாளையம் அருகே அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள கோமுகி ஆறு தியாகதுருகம் ஒன்றியம் வழியே கடலுார் மாவட்டத்தை சென்றடைகிறது.தோப்பூர், சோமண்டார்குடி, கள்ளக்குறிச்சி, குரூர் மற்றும் விருகாவூர் அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் செல்கிறது.இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் மறைமுக பாசன வசதி பெறுகிறது. அதேபோல் தடுப்பணைகள் நிரம்பும் போதும் ஆற்றில் சீரான நீரோட்டம் இருக்கும். அத்தருணங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.இதனால் கிணற்று பாசனம் கை கொடுப்பதன் மூலம் விவசாயம் செழிக்க முக்கிய காரணமாக தடுப்பணைகள் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றியதால் கோமுகி ஆறு நீரோட்டம் இன்றி வறண்டு கிடந்தது.கடந்த மாதம் கல்வராயன் மலையில் பெய்த மழையின் காரணமாக கோமுகி அணை நிரம்பியது. அதைத்தொடர்ந்து ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது தடுப்பணைகள் நிரம்ப வழிவகை செய்யவில்லை.இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக கல்வராயன் மலையில் மழை வெளுத்து வாங்கியது. அதன் காரணமாக கல்படை காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோமுகி அணை மீண்டும் நிரம்பியது.இதையடுத்து 1,500 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால், ஆற்றின் இருகரையை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டோடியது. தடுப்பணைகளுக்கு மேலே தண்ணீர் சீறிப் பாய்ந்தோடியது.தடுப்பணையில் இருந்து கால்வாய் வழியே அருகிலுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதால் அவைகளும் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் ஆற்றுப்படுகையில் நீர் வளம் பெருகியுள்ளது.தொடர்ந்து 3 ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X