ஐயப்பன் கோவிலில்  மகர விளக்கு திருவிழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்பன் கோவிலில்  மகர விளக்கு திருவிழா

Added : டிச 04, 2019

சூலுார்:காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு திருவிழா துவங்கியது.சூலுார் அடுத்த காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டு தோறும் மண்டல மகர விளக்கு திருவிழா மற்றும் அகண்ட நாம ஜபம் நடப்பது வழக்கம். கடந்த, 1ம் தேதி காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை அகண்டநாம ஜபம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.வரும், 14ம் தேதி திரை பூதங்கனியும், 19ம் தேதி, 'மகாபாரதத்தை நோக்கி' எனும் தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து, உடுக்கை பாட்டு, நாட்டியம், இசையருவி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 23ம் தேதி பறையெடுப்பும், 25 மற்றும் 26ம் தேதியன்று ஐயப்பனின் அலங்கார ஊர்வலம் நடக்கிறது. ஜன.,15ம் தேதி ஜோதி தரிசனம், பஜனை மற்றும் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை காங்கயம்பாளையம் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X