சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழிவு நீர் கொட்ட வந்த லாரி சிறை பிடித்த கிராம மக்கள்

Added : டிச 04, 2019
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் அருகே, கழிவுநீர் கொட்ட வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.குப்பனுார் ஊராட்சி, ஒட்டகமண்டலத்தில், நேற்று காலையில் ஒரு கழிவுநீர் லாரி, பள்ளத்தில் கழிவுநீரை ஊற்ற முயன்றது. இதை பார்த்து அப்பகுதி விவசாயிகள் வந்து, லாரியை தடுத்து நிறுத்தி, வாகனத்தை சிறைபிடித்தனர். பின்னர், அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''தனியார் நிறுவனத்திலிருந்து, ரசாயனம்

அன்னுார்:அன்னுார் அருகே, கழிவுநீர் கொட்ட வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.குப்பனுார் ஊராட்சி, ஒட்டகமண்டலத்தில், நேற்று காலையில் ஒரு கழிவுநீர் லாரி, பள்ளத்தில் கழிவுநீரை ஊற்ற முயன்றது. இதை பார்த்து அப்பகுதி விவசாயிகள் வந்து, லாரியை தடுத்து நிறுத்தி, வாகனத்தை சிறைபிடித்தனர். பின்னர், அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''தனியார் நிறுவனத்திலிருந்து, ரசாயனம் கலந்த கழிவுநீரை எடுத்து வந்து இங்கு விவசாயம் செய்யாத தோட்டத்து பள்ளத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், அருகிலுள்ள கிணறுகளில் நீர் மாசுபடுகிறது. இரவு நேரத்தில் வந்து கொட்டுகின்றனர்.எனவே, லாரியை விடுவிக்க மாட்டோம்' என்றனர். இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அன்னுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், லாரி ஓட்டுனர் மற்றும் அந்த நிறுவனத்தினர், மக்களிடம், 'இனி இங்கு கழிவு நீர் கொட்ட மாட்டோம்' என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள், அந்த கழிவுநீர் லாரியை விடுவித்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X