பொது செய்தி

தமிழ்நாடு

விழலுக்கு இறைத்த நிதி! பூட்டியே கிடக்குது பொது சேவை மையங்கள்

Added : டிச 04, 2019
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட, பொது சேவை மையங்கள் பூட்டியே கிடக்கின்றன.தமிழ்நாட்டில், 12 ஆயிரத்து, 524 பொது சேவை மையங்கள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், இ- சேவை வசதிகள் வாயிலாக, தங்கள் தேவைகளை நிறைவேற்றவும், அரசு திட்டங்களின் பயன்களை உடனுக்குடன் பெறவும், ஒவ்வொரு கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், இ--சேவை மைய கட்டடங்கள், தலா, 15 லட்ச ரூபாய் செலவில் கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்டன. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் எண். 24 வீரபாண்டி, சோமையம்பாளையம், பிளிச்சி, நாயக்கன்பாளையம், குருடம்பாளையம், அசோகபுரம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், சின்னத்தடாகம் ஊராட்சிகளில் கட்டப்பட்டன. இம்மையங்களுக்கு அதிவேக இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பணியாளர்கள் யாரும் நியமனம் செய்யப்படாததால், பல ஊராட்சிகளில் பழைய கட்டட சாமான்கள் போட்டு வைக்கும் அறையாகத்தான் இது பயன்படுகிறது. நாயக்கன்பாளையம் போன்ற ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொது சேவை மையக்கட்டடம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.இது குறித்து, கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் கூறுகையில்,' கிராமங்கள் வளம் பெறவும், கிராம மக்களின் அனைத்து தேவைகளை, எவ்வித சிரமமும் இல்லாமல் ஆன் லைனின் மேற்கொள்ள இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் கிராம மக்களின் சிரமம் தீரவில்லை. இன்னும் பலர், தங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றிட, தனியார் பொது சேவை மையத்தை நாட வேண்டியுள்ளது. இதனால், லட்சக்கணக்கான அரசு பணம் வீணாகும் அவலம் நீடிக்கிறது.பொறுப்பு துறப்பு!இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' பொது சேவை மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அரசு மகளிர் திட்ட அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அவர்கள், தகுந்த மகளிர் சுய உதவிக்குழுவினரை தேர்வு செய்து, ஒப்படைக்க வேண்டும். அவர்கள் உடனடியாக பணிகளை செய்யாததால், கட்டடங்கள் இன்னும், முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X