கள்ளக்குறிச்சி:ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் இந்திய அரசியலமைப்பு சாசன தினத்தையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, முதல்வர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த், சுதா முன்னிலை வகித்தனர். ஜீவிதா வரவேற்றார். இந்திய அரசியலமைப்பு சாசன தினமான நவம்பர் 26ம் தேதி முதல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி வரை சி.பி.எஸ்.இ., பள்ளியில் அரசியலமைப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதையொட்டி இந்திய குடிமகனின் கடமைகள், சமூகத்திற்கு செய்ய வேண்டிய பணிகள், சட்டங்களை பின்பற்றுதல் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஊர்வலமாக சென்று, புதிய இந்தியாவை உருவாக்குவோம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.