பொது செய்தி

தமிழ்நாடு

'இலக்கிய சாரல்' அமைப்பு கல்லுாரியில் துவக்கம்

Added : டிச 04, 2019
Advertisement

சூலுார்:சூலுார் ஆர்.வி.எஸ்., கலை, அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், 'இலக்கிய சாரல்' அமைப்பு துவக்க விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, மேலாண்மை அறங்காவலர் செந்தில் கணேஷ் தலைமை வகித்தார். செயலர் முகமது முபாரக் வரவேற்றார். இலங்கையை சேர்ந்த சொற்பொழிவளர் ஜெயராஜ், 'இலக்கியம் எதற்கு' என்ற தலைப்பில் பேசியதாவது:அறிவியல் மட்டும் அறிவு கிடையாது. இலக்கியங்கள் அறிவோடு, பண்பையும் போதிக்கின்றன. இலக்கியங்களை படைப்பது, தற்போது புத்தகங்கள் வெளியிடுவது போன்று எளிதல்ல. முற்காலத்தில், தமிழ் சங்கங்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்த பின்னரே, நமது படைப்புகளை வெளியிட முடியம். இலக்கியத்தில் தவறு நேர்ந்தால், சமுதாயத்தை பாதிக்கும்.பட்டங்களில் உயர்ந்தது மனிதன் என்ற பட்டம். நல்ல மாண்புள்ள மனிதனாக உயர இலக்கியங்கள் போதிக்கும் அறத்தின் வழி நடக்க வேண்டும். தற்போதைய பள்ளி பாடங்கள், மனதை சுருக்குகிறது. இலக்கியங்கள் மனதை விசாலப்படுத்துகிறது. நாமும் படித்து குழந்தைகளுக்கும் போதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X