பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள்

Added : டிச 04, 2019
Advertisement

அன்னுார்:மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்படுவதாக, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் தெரிவிக்கப்பட்டது.பள்ளி கல்வித்துறை சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா அன்னுார், தெற்கு பள்ளி வளாகத்திலுள்ள பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நேற்று நடந்தது. அன்னுார் வட்டாரத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் வீட்டு கல்வி பயிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறன் படைத்த, 70 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் ஓட்டம், குதித்தல், பலுான் ஊதி உடைத்தல், முறுக்கு கடித்தல், ஆரஞ்சு பழம் உரித்தல், நடனம் ஆகிய போட்டிகள் நடந்தன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, ஒருங்கிணைப்பாளர் சுப்புலட்சுமி பேசுகையில்,'' மாற்றுத்திறனாளி மாணவர்கள் கற்றலுக்கும், அவர்களை பராமரிப்பதற்கும், தற்போது கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாதாந்திர உதவி தொகை, பராமரிப்பு தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன.தேவைப்படும் உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. உயர்கல்வி வரை, உதவி வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.சிறப்பு ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர், பங்கேற்றனர்.கவுண்டம்பாளையம்உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாற்றுத்திறன், குழந்தைகளுக்கான பகல்நேரப் பராமரிப்பு மையத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, இவ்விழாவில், வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியப் பயிற்றுனர் பிளாரன்ஸ் தலைமை வகித்தார். சிறப்புக் கல்வி ஆசிரியை தேன்மொழி வரவேற்றார். உள்ளடங்கிய கல்விப் பிரிவின், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, ஆட்டிடியூட் டிரஸ்ட் அமைப்பின் நிர்வாக செயலாளர் பிரசன்னா, பிஸியோதெரபிஸ்ட் மதனகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்டிடியூட் டிரஸ்ட் அமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தார். இவ்விழாவில் ஓட்டப்பந்தயம், தண்ணீர் நிரப்புதல், பலுான் வெடித்தல் உள்ளிட்ட போட்டிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள், ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குழந்தைகள் நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.விழாவில், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X