பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பு மனு விதிமுறைகள்; பயிற்சி வகுப்பில் அறிவுரை

Added : டிச 04, 2019
Advertisement

அன்னுார்:அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உதவி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.உள்ளாட்சி தேர்தல்வரும் 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளது. அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சி தலைவர்கள், 15 ஒன்றிய கவுன்சிலர்கள், 195 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர்களுக்கு தேர்தல் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் அலுவலராக, உதவி திட்ட அலுவலர் முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தல் அலுவலராக தணிக்கை உதவி இயக்குனர் மதுராவும், உதவி தேர்தல் அலுவலர்களாக, துணை பி.டி.ஓ.,க்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நேற்று அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகேசன் பேசுகையில், ''வேட்பு மனுக்கள் பெறுவது தொடர்பான விதிமுறைகளை, தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு, பொறுமையாக பதில் சொல்ல வேண்டும். விதிமுறை மீறலுக்கு இடம் தரக்கூடாது. சின்னங்கள் ஒதுக்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.தணிக்கை உதவி இயக்குனர் மதுரா, தேர்தல் விதிகள் குறித்து விளக்கினார். பி.டி.ஓ.,க்கள் குழந்தைராஜ், விஜயராணி ஆகியோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X