பொது செய்தி

தமிழ்நாடு

நன்னெறியோடு வாழ நுாலகம் துணை நிற்கும்

Added : டிச 04, 2019
Advertisement

பெ.நா.பாளையம்:வாழ்க்கையில், நல்ல நெறியில் பயணிக்க, நுாலகம் துணை நிற்கும் என, நுாலக வார விழாவில் வலியுறுத்தப்பட்டது.துடியலுார் கிளை நுாலகம் வாசகர் வட்டத்தின் சார்பில், 52வது நுாலக வாரவிழா நடந்தது. நுாலகர் கலைமொழி வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் கலையரசன், தன் வாழ்க்கை உயர நுாலகம் எவ்வாறு உதவியது என, விளக்கினார். புலவர் சோலுார் கணேசன் பேசுகையில்,'' நுாலகம் அனைவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக உள்ளது. இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு உயர்பதவிகளை அடையவும், வேலை கிடைக்காத நபர்கள், இங்குள்ள போட்டித் தேர்வுக்களுக்கான புத்தகங்களை படித்து, வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன் என்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விக்னேஸ்வர், மனம் செயல்படும் விதம், ஒருவரை ஊக்குவித்து செயலாற்றும் போது, மனிதன் நன்னெறியில் வாழ முடிவதாகவும், இவற்றுக்கு நுாலகம் துணை நிற்கும் என்றார்.நிகழ்ச்சியில், திரளான வாசகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X