பொது செய்தி

தமிழ்நாடு

சோ.குப்பம் ஏரி உபரி நீர் புகுந்து நெற்பயிர் சேதம்

Added : டிச 04, 2019
Share
Advertisement
செஞ்சி:சோ.குப்பம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீரால் நெற் பயிர்கள் மூழ்கின. இதனால், உபரி நீர் செல்லும் வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செஞ்சி அடுத்த சோ.குப்பம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி, தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பி ஏரியிலிருந்து உபரி நீர்
 சோ.குப்பம் ஏரி உபரி நீர் புகுந்து நெற்பயிர் சேதம்

செஞ்சி:சோ.குப்பம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீரால் நெற் பயிர்கள் மூழ்கின. இதனால், உபரி நீர் செல்லும் வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செஞ்சி அடுத்த சோ.குப்பம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி, தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.இந்த உபரிநீர் வெளியேறும் வாய்க்கால் மிக குறுகலாக இருப்பதால் அதிக அளவில் வரும் உபரி நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது. 1 கி.மீ., துாரத்திற்கு சென்ற உபரி நீரால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின.இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, உபரி நீர் செல்லும் வாய்க்காலை உடனடியாக அகலப்படுத்தி, விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகாதவாறு பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X