பொது செய்தி

தமிழ்நாடு

குழாய் பதிக்க தோண்டிய குழியில் சுவாமி சிலைகள் கிடைத்தன

Added : டிச 04, 2019
Advertisement
 குழாய் பதிக்க தோண்டிய குழியில் சுவாமி சிலைகள் கிடைத்தன

அன்னுார்:அன்னுாரில், குழாய் பதிக்க தோண்டிய குழியில் கிடைத்த சுவாமி சிலைகளை, வருவாய் துறையினர் எடுத்து சென்றனர்.சுமை தாங்கியிலிருந்து, அன்னுாருக்கு, கூட்டு குடிநீர் திட்டத்தில், பவானி ஆற்று நீர் கொண்டு வர, குழி தோண்டி குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. நேற்று அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் எதிர்ப்புறம் ஒப்பந்த தொழிலாளர்கள் குழி தோண்டும்போது, நான்கு அடி ஆழத்தில் இரண்டு கற்சிலைகள் கிடைத்தன. ஒரு சிலை, கையில் வாளுடன் மூன்று அடி உயரம், இரண்டடி அகலத்தில் கருப்பராய சுவாமி போல் காட்சி அளிக்கிறது. மற்றொன்று, இரண்டடி உயரத்தில், ஒன்றரை அடி அகலத்தில் அம்மன் சிலைபோல் காட்சி தருகிறது. தொழிலாளர்கள் அந்த கற்சிலைகளை சுத்தப்படுத்தி அருகில் வைத்தனர்.தகவலறிந்து தாசில்தார் சந்திரா, துணை தாசில்தார் நித்திலவள்ளி ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். மாவட்ட நிர்வாகத்திற்கும், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர்.'மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு சிலைகள், தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்' என, தாசில்தார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X