பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதை மேம்பாலத்தை விரைவில் முடிக்க கோரிக்கை

Added : டிச 04, 2019
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து தினமும், கோவைக்கு நான்கு முறை பாசஞ்சர் ரயிலும், சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் புறப்பட்டுச் செல்கிறது. இந்த பயணிகள், ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்டரில், டிக்கெட் எடுத்த பிறகு, தண்டவாளத்தை கடந்து, ரயில் பெட்டிகளில் ஏறச் செல்கின்றனர். டிக்கெட் கவுன்டரிலிருந்து, ரயில் பெட்டிகளில் பயணிகள் ஏற, ஒரு கி.மீட்டர் துாரம் நடந்து செல்கின்றனர். அதனால், நடைபாதை மேம்பாலம் கட்டும்படி, பயணிகள் ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.பயணிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்த, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், நடைபாதை மேம்பாலம் கட்ட, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.அதன் பேரில் கடந்த ஜூன் மாதம் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை துவக்கினர். இரண்டு மாதம் பணிகள் துரிதமாக நடந்தன. அதன் பிறகு மூன்று மாதங்கள் பணிகள் ஏதும் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில், மேம்பாலம் கட்ட இரும்பு கர்டர்கள் கொண்டு வந்தனர். நடைபாதை மேம்பாலம் அமைக்க, மூன்று பக்கம் இரும்பு துாண்களை மட்டும் நிறுத்திய கான்ட்ராக்டர், கடந்த இரண்டு வாரமாக பணிகள் ஏதும் செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.எனவே, ரயில்வே அதிகாரிகள் நடைபாதை மேம்பாலத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X