தமிழ்நாடு

அனைத்திலும் அலட்சியமே திறந்தநிலையில் குடிநீர் 'ஏர் வால்வு' தொட்டிகள் கழிவுகள் கலப்பதால் பரவுது தொற்று நோய்கள்

Added : டிச 04, 2019
Advertisement

அருப்புக்கோட்டை:குடிநீர் விநியோகம் செய்ய விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கு பகிர்மான குழாய்களில் பதிக்கப்பட்ட 'ஏர் வால்வு' தொட்டிகள் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் இருப்பதால் பாதுகாப்பான குடிநீர் வழங்குவது கேள்விகுறியாக உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஊருக்கும் பகிர்மான குழாய்கள், 'ஏர் வால்வு தொட்டிகள், கேட் வால்வு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கேட் வால்வு மற்றும் ஏர்வால்வு தொட்டிகள் பாதுகாப்புடன் மூடி வைக்காமல் திறந்தவெளியில் வைத்துள்ளனர். சுகாதார கேடு ஏற்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்குவது கேள்விக்குறியாக உள்ளது. திறந்த கிடக்கும் தொட்டிகளில் குப்பை வேறு சேர்கின்றன.

ஒருசில இடங்களில் கழிவு நீரும் தொட்டியில் கலக்கிறது. தொட்டிகளில் தேங்கிய தண்ணீரை கால்நடைகள் குடிக்கின்றன. மழை காலங்களில் மழை நீரும், கழிவு நீரும் ரோட்டில் ஓடி திறந்தவெளி தொட்டிகளில் கலந்து விடுகிறது. கழிவு நீர் குழாய்களில் வழியாக இறங்கி அனைவரும் சுகாதார கேடான குடிநீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.தொட்டிகளில் ஒருசில ரோட்டின் நடுவே இருப்பதால் விபத்து அபாயமும் உள்ளது.

இதுபோன்று கேட் வால்வு , ஏர் வால்வு தொட்டிகளை மூடி போட்டு பாதுகாக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரில் பல பகுதிகளில் குடிநீர் கேட்வால்வு தொட்டிகள் திறந்தநிலையில் உள்ளன. இவற்றை பாதுகாப்பாக மூடி வைக்க அக்கறை கொள்வதும் இல்லை.திறந்து கிடக்கும் தொட்டிகளால் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது இது போன்ற தொட்டிகளை பாதுகாப்பாக மூடி அமைப்பது அவசியமாகிறது.

- கனகராஜ், ரியல் எஸ்டேட்,

அருப்புக்கோட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X