பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணைகள் நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

Added : டிச 04, 2019
Share
Advertisement
அன்னுார்:இரு ஊராட்சிகளில் தடுப்பணைகள் நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் குடிமராமத்து திட்டத்தில், தலா ஒரு லட்சம் ரூபாயில் 37 குட்டைகளில் துார் வாரும் பணி நடந்தது. மேலும் நான்கு குளங்களில் தலா ஐந்து லட்சம் ரூபாயில் குளம் துார் வாரும் பணி நடந்துள்ளது. இதில் பல குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள்

அன்னுார்:இரு ஊராட்சிகளில் தடுப்பணைகள் நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் குடிமராமத்து திட்டத்தில், தலா ஒரு லட்சம் ரூபாயில் 37 குட்டைகளில் துார் வாரும் பணி நடந்தது. மேலும் நான்கு குளங்களில் தலா ஐந்து லட்சம் ரூபாயில் குளம் துார் வாரும் பணி நடந்துள்ளது. இதில் பல குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குப்பனுார் ஊராட்சி, குன்னியூர் கைகாட்டியில் மூன்று ஏக்கர் பரப்பளவு உள்ள குட்டை உள்ளது. இக்குட்டை இருமாதங்களுக்கு முன் துார்வாரப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில், இந்த குட்டை முழுமையாக நிரம்பி விட்டது. கிழக்கே பிஞ்சமடையிலிருந்து பள்ளத்தில் வரும் நீரால் இந்த குட்டை நிரம்பி, இங்கிருந்து நீர் வடக்கு நோக்கி செல்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குட்டை நிரம்பி நீர் வழிந்து செல்வதை பார்க்கிறோம் என குன்னியூர் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.இதே போல், அக்கரை செங்கப்பள்ளி, குப்பனுார் ஊராட்சிகளில் உள்ள தடுப்பணைகளில் பெரும்பாலானவை நிரம்பி விட்டன. 26 ஏக்கர் பரப்பளவு உள்ள வையாளிபாளையம் குளத்தில், 50 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. காட்டம்பட்டியிலுள்ள, 200 ஏக்கர் குளத்தில், 40 சதவீத அளவுக்கு நீர் உள்ளது.தன்னார்வலர்கள் கூறுகையில்,'துார்வாரும் பணிக்கு உதவ விரும்புவோர் முன்வர வேண்டும். கரை ஒழுங்குபடுத்துதல், மரக்கன்று நட்டு பராமரித்தல், என பல பணிகள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் ஒத்துழைக்க முன்வர வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X