பொது செய்தி

தமிழ்நாடு

சாலையின் நடுவே மின் கம்பம்

Added : டிச 04, 2019
Advertisement
 சாலையின்  நடுவே  மின் கம்பம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி நகராட்சி எம்.ஜி.ஆர்., நகரில் சாலை நடுவே மின்கம்பம் இருப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சி 2வது வார்டு எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் 8வது குறுக்கு தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இந்த சாலை வழியாக இங்கு வசிக்கும் 500க்கும் மேற்பட்டோர் கார் உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.ஆனால் சாலையின் நடுவே மின் கம்பம் இருப்பதால் அவசர தேவைக்கு வாகனங்களை அவ்வழியாக செலுத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்படுகிறது. அத்துடன் ஆம்புலன்ஸ் வாகனங்களோ கோடை காலங்களில் நகராட்சி மூலமாக வழங்கப்படும் தண்ணீர் டேங்கர் லாரியோ தெருவிற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனவே, இந்த சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றிட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X