பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

Added : டிச 04, 2019
Advertisement

உளுந்துார்பேட்டை:எலவனாசூர்கோட்டை சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை முதல் சேலம் வரை உள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியால் இந்த சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.அதன்பின்னரே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் 136 கி.மீ., துார சாலையை 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலையாக அமைக்கும் பணி நடந்து, கடந்த 2012ம் ஆண்டு முதல் வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. இதில் உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி புற வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி பகுதிக்குள் செல்லும் நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால், சாலைகள் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக மாறியுள்ளது.தற்போது மழை பெய்து வரும் நிலையில் சாலை மேலும் படுமோசமாகி உள்ளது.

வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர்.குறிப்பாக எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வப்போது பேட்ச் ஒர்க் செய்தும் மீண்டும் மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது. எனவே, குண்டும் குழியமான சாலையை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X