அன்று மழையின்றி நஷ்டம் இன்று மழையால் நஷ்டம்

Added : டிச 04, 2019
Advertisement

சாத்துார்:சாத்துார் பகுதியில் தொடர் மழையால் மானாவாரி நிலத்தில் தண்ணீர் தேங்கி பயறு வகைகள் நாசமடைந்துள்ளன.

சாத்துார் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்துள்ளனர். காய்பறிக்கும் நிலையில் கடந்த இருநாட்களாக மழை பெய்கிறது. மானாவாரி நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிலம் சேறாக இருப்பதால் விவசாயிகளால் பயறு காய்களைபறிக்கமுடியவில்லை. ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் 20 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

என்.மேட்டுப்பட்டி விவசாயிகள் சங்கத்தலைவர் தனுஷ்கோடிராஜ் கூறுகையில்,'' கடந்தாண்டு மழை பெய்யாமலும், தற்போது மழையாலும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கடந்தாண்டு பயிர்காப்பீடு செய்தும் இழப்பீடு வழங்கப்பட வில்லை. தற்போது காப்பீடு செய்ய கூட வசதியின்றி பலர் கடன் வாங்கி பயிர் செய்தனர். மழையால் அனைத்தும் நாசமடைந்து விட்டது ,''என்றார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X