குடை இல்லாமல் உள்ளே வராதீங்க... கல்வி அலுவலகத்தில் ஒழுகுது மழை நீர்

Added : டிச 04, 2019
Advertisement

விருதுநகர்:விருதுநகரில் முதன்மை கல்வி அலுவலக வளாக மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் பொதுமக்கள் குடையோடு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலக வளாகம் உள்ளது. எஸ்.பி., அலுவலகம் எதிரில் அமைந்துள்ள இதில் கைத்தறி, துணிநுால் துறை, சுகாதார துணை இயக்குனர் அலுவலகம், குடும்ப நலவாழ்வு துறை, நில அளவை உதவி இயக்குனர் அலுவலகம், சி.இ.ஓ., அலுவலகம், கூட்டுறவு துறை அலுவலகம் என பல அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. இது 2 மாடி கட்டடமாகும்.

இக்கட்டடத்தின் சுவர்கள் சிதிலமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இங்கு 500க்கு மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் பணிபுரிகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கைத்தறி, துணிநுால் அலுவலகம் அருகே உள்ள மேற்கூரையில் மழைநீர் ஒழுகுகிறது. இது 2ம் தளத்தின் தரையில் தேங்கி கிடக்கிறது. அப்பகுதியில் நடந்து வருவோர் வழுக்கி விழும்
அபாயம் உள்ளது.

முதன்மை கல்வி அலுவலக வளாக 'சன்ஷேடுகளும்' நொறுங்கி பாசி பிடித்து காணப்படுகின்றன. சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. தரைத்தளத்தில் அலுவலகத்தின் பக்கவாட்டில் குப்பை குவிந்து கிடக்கிறது. கழிப்பறைகள் பராமரிக்கப்படுவதே இல்லை. மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவது ஊழியர்கள் மத்தியில் 'கிலி'யை ஏற்படுத்தி உள்ளது. மேற்கூரை, 'சன்ஷேடு' வழியாக உள்ளே இறங்கும் மழைநீரானது கட்டடத்தை முழுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. அதற்குள் கட்டடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X