ராஜபாளையம்:ராஜபாளையத்தில்
தொடர் மழையால் குடிநீர் ஆதாரமாக உள்ள நீர் நிலைகள் நிறைந்து ஆற்று
பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம் சுற்று
பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.நேற்று
மாலை ஆரம்பித்து விடாமல் பெய்த கனத்தமழையால் நீர் நிலைகள் மற்றும்
ஆறுகளில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கண்மாய்கள் மறுகால் பாய்ந்து
வருகின்றன. ராஜபாளையம்
குடிநீர் ஆதாரமான ஆறாவது மைல் நீர்
தேக்கம் முழு அளவான18 அடி , இரண்டாவது நீர்
தேக்கம் 19 அடியை
எட்டியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சரிவுகளில் தற்காலிக
நீர் வீழ்ச்சிகள் உருவாகிரம்மியமாக
காட்சியளித்தது.நீர்த்தேக்கங்கள் நிறைந்ததால் ஆற்று நீர்
திறந்து விடப்பட்டு கண்மாய்களுக்கு தடையின்றி செல்கிறது.