பொது செய்தி

தமிழ்நாடு

தீவிரம்! கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் சாகுபடியில்...பருவமழையால் விவசாய பணிகள் துவக்கம்

Added : டிச 04, 2019
Advertisement
 தீவிரம்! கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் சாகுபடியில்...பருவமழையால் விவசாய பணிகள் துவக்கம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையால் நீர் நிலைகள் நிரம்பி வருவதால் விவசாய பணிகள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

விவசாயமே பிரதான தொழிலாக விளங்கும் கள்ளக்குறிச்சி, தமிழகத்தில் தஞ்சாவூருக்கு அடுத்த இரண்டாவது நெற்களஞ்சியமாக விளங்குகிறது. கோமுகி, மணிமுக்தா அணைகள் மற்றும் பாக்கம்பாடி அணைக்கட்டு, கோமுகி, மணி, முக்தா, வசிஷ்டா, திருமணிமுக்தா, மயூரா உள்ளிட்ட ஆறுகள் உள்ளன.பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 48 ஏரிகள், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு சொந்தமான 15 ஏரிகள் என மொத்தம் 63 ஏரிகள் உள்ளன.கோமுகி அணையிலிருந்து பழைய பாசன நிலங்களான 5,860 ஏக்கர் நிலப்பரப்பு, புதிய பாசன நிலங்களான 5000 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. மணிமுக்தா அணையிலிருந்து 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பாசன நிலங்கள் உள்ளன.கள்ளக்குறிச்சி பகுதியைச் சுற்றிலுமாக 200க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. அதேபோல் கரும்பு சாகுபடி அதிகளவில் செய்யப்படுவதால் இப்பகுதியில் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், ஒரு தனியார் சர்க்கரை ஆலை என மூன்று ஆலைகள் உள்ளன.கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் நீர் பிடிப்பு பகுதிகள் தண்ணீரின்றி வறண்டு போனது. இதனால், பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர்.இதனால் விவசாய நிலங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவே மாறின. வறட்சி காலங்களில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிரிட்டு வருகின்றனர்.இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்குவதால் கோமுகி அணை முழுமையாக நிரம்பி, வரத்து நீர் முழுவதும் ஆறு வழியாக வெளியேற்றப்படுகிறது.
இதனால், கோமுகி ஆற்றில் அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தோடுகிறது. இதன் மூலம் ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல், மணிமுக்தா அணையிலும் நீர் வரத்து ஏற்பட்டு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.இதனால் விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கான சாகுபடியை துவக்கியுள்ளனர். இந்த மழை நீர் அடுத்து வரும் கோடைக்காலம் வரை தாக்குப்பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் பயிர் சாகுபடியினை துரிதப்படுத்தியுள்ளனர்.கடந்த சில ஆண்டுகளாக விவசாய பணிகளையே மேற்கொள்ளாமல் வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த விவசாய கூலித் தொழிலாளிகள் மிகுந்த மன நிறைவுடன் தங்களின் குலத்தொழிலாக ஏற்று நடத்தி வந்த விவசாய பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X