பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் பயிற்சி கூட்டம்

Added : டிச 04, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி, ஒன்றிய அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவமலர் தலைமை தாங்கி பேசினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கார்த்திகா, புஷ்பராஜ், நடராஜன், செல்லதுரை முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு வரவேற்றார்.கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், வார்டு குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்தும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கும் பொருட்டு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வு பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X