பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தொடர் மழை நீரில் மூழ்கிய உளுந்து பயிர்கள்

Added : டிச 04, 2019
Advertisement

விழுப்புரம்:மாவட்டத்தில் தொடர் மழையால், உளுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால், மாவட்டத்தில் நெல், வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால், விவசாய நிலங்களில் மழைநீர் குட்டையாக தேங்கி நிற்கிறது. இதில், கெடார் சுற்றுப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளது.இதனால், உளுந்து பயிர் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X