கல்வீச்சு வழக்கில் 4 பேர் கைது
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை
கல்லுாரணி அருகே நேற்று முன்தினம் அரசு டவுண் பஸ் மீது கல்
வீசப்பட்டு கண்ணாடி உடைக்கப்பட்டது . இதே போன்று நேற்று காலை 11:30
மணிக்கு ராஜபாளையத்திலிருந்து அருப்புக்கோட்டை வந்த அரசு பஸ்
புளியம்பட்டி பகுதியில் வந்த போது இருவர் கல் வீசியதில் கண்ணாடி
உடைந்தது. பஸ்சில் முன் பகுதியில் அமர்ந்திருந்த ராஜீவ் நகரை
சேர்ந்த கஸ்துாரி 80, காயமடைந்தார். கல் வீசியவர்களை டவுண்
போலீசார் தேடுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார்: நேற்று முன்தினம்
நள்ளிரவு 12:45 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் சின்னகடை பஜாரில்
மர்மநபர்கள் கல்வீசி தாக்தியதில் அரசு பஸ் பின்பக்க கண்ணாடி
உடைந்தது. இந்திரா நகர் அருகே வந்த மற்றொரு பஸ்சின்மீது , கல்
வீசியதில் பெரியகுளத்தை சேர்ந்த டிரைவர் ராஜா 34, காயமடைந்தார்.
சிவகாசியில்
பஸ் மீது கல்வீசிய சின்னசாமி, முனியாண்டி, மணிகண்டன், மரியப்பன்,
பெருமாள், ராம்குமார் மீது கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுபோல் விருதுநகரில் கல்வீசிய அல்லம்பட்டி முனியாண்டி, ராமச்சந்திரன்,
மாரியப்பன் ஆகியோரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.
போலி ஹாலோகிராம் நான்கு பேர் கைது
சிவகாசி:அரசு முத்திரையுடன் கூடிய போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சிவகாசி
கிழக்கு எஸ்.ஐ., செல்வக்குமார் மற்றும் போலீசார்
முதலிப்பட்டி
ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முனீஸ்வரன்
காலனி ஆண்டவர் 53, விருதுநகர் அய்யனார் நகர் ராமச்சந்திரன்
49, ஆகியோரை சோதனை செய்ததில் அரசு முத்திரையுடன் புவியியல்
மற்றும் சுரங்கத்துறை , தமிழ்நாடு மைன்ஸ் என மின்னணு மூலம்
பொறிக்கப்பட்ட 6400 ஹாலோகிராம் ஸ்டிக்கர் வைத்திருந்தது
கண்டறியப்பட்டது.
விசாரணையில் சிவகாசி ஓடைத்தெரு நாகராஜன், அய்யப்பன் காலனி ராஜா கொடுத்தது தெரிய வந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.